மகாநதி- காவிரியை இணைக்க ரஜினி யோசனை... அய்யாக்கண்ணு தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய நதிகளை இணைக்க பிரதமர் மோடியிடம் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்த வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கோரியுள்ளார்.

தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அய்யாக்கண்ணு. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சென்று தொடர் போராட்டத்தை நடத்தியவர்.

Ayyakannu meets Rajinikanth

அய்யாக்கண்ணு இன்று ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்திற்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடியிடம் இந்திய நதிகளை இணைக்க நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்த வேண்டும் என்று அய்யாக்கண்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.

Ayyakannu meets Rajinikanth

அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் ரஜினிகாந்த், பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய நதிகளை இணைக்க ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Farmers Union leader Ayyakannu met Rajinikanth to demand national river inter link.
Please Wait while comments are loading...