சிபிஐ சோதனைக்கு முன்னர் கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் என்ன கூறியிருந்தார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொழில் ரீதியாக குற்றம்சாட்டப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று சிபிஐ சோதனை வளையத்தில் சிக்குவதற்கு முன்னர் கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்படுவார் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருத நிலையில் இன்று நாடு முழுவதும் 17 இடங்களில் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் இறங்கியுள்ளது.

 Before Raids Karti tweeted that its unfortunate to business are targeted because of politics

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நுங்கம்பக்க்ம வீட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிநீயாயம் கோரி பிரதமரை அணுகும் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்தி பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்த செய்திக்கு தனது பதிலை பதிவிட்டிருந்த கார்த்தி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வர்த்தகர்கள் மற்றும் தொழில் புரிவோர் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று டுவீட்டியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karti chidambaram tweets that professionals and businesses are targeted because of politica before it raids in connection with Rajasthan ambulance scam victims urges Justice from PM
Please Wait while comments are loading...