தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுநிலை.. சென்னையில் இன்று முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வேண்டிய பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கியது.
தாமதமாக தொடங்கினாலும் சராசரியை விட அதிகளவு மழை பொழிவு இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் தொடக்கத்தில் கூறியதைப் போலவே அதிரடி காட்டிய பருவமழை பின்னர் ஓய்வெடுக்க தொடங்கியது.

புதிய காற்றழுத்தம்
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை ஓய்ந்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.

நெருங்கும் காற்றழுத்தம்
இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இந்திய கடலோர பகுதியை நெருங்குவதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு திசையில் நகரும்..
தற்போது கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் அந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலை கொண்டுள்ளதாகவும் ஸ்கைமெட் வெதர் அமைப்பு தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு திசையில் நகரும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நாளை முதல் 28 ஆம் தேதி வரை
இதனால் சென்னையில் இன்று முதல் மழை தொடங்கும் என்றும் ஸ்கைமெட் தனியார் வெதர் அமைப்பு தெரிவித்துள்ளது. நாளை முதல் 28ஆம் தேதி வரை மிதமான மற்றும் கனமழை பெய்யும் என்றும் அந்த தனியார் வெதர் அமைப்பு கூறியுள்ளது.

டிசம்பர் 4 வரை நீடிக்கும்
இந்த மூன்று சென்னை புறநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி வரை சென்னையில் லேசான மழை பெய்யும் என்றும் ஸ்கைமெட் வெதர் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications