ஜிஎஸ்டி தள்ளுபடி.. நள்ளிரவில் திறந்திருக்கும் பிக்பஜார்! வாடிக்கையாளர்களுக்கு சலுகை மழை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு உடனே கொண்டு சேர்ப்பதாக அறிவித்துள்ள பிக்பஜார் நிறுவனம், நாடு முழுக்க இரவு 12 மணி முதல் 2 மணிவரை அதன் கடைகளை திறந்து வைத்திருக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு இன்று இரவு 12 மணிக்கு மேல் அறிமுகமாகிறது. இதையடுத்து சில ஆஃபர்களை அறிவித்துள்ளது பிக்பஜார். இரவு 12 மணிவரை அதிகாலை 2 மணிவரை ஷோரூம்களை திறந்து வைத்து பொருட்களை விற்பனை செய்கிறது.

Big Bazaar offers GST offer from 12 am to 2 am

சர்க்கரை, சூரியகாந்தி எண்ணை, துவரம் பருப்பு, கிளாஸ் டம்ளர், பிஸ்கட், டீ, சுத்தப்படுத்தும் பொருட்கள், கப்புகள், டின்னர் செட்டுகள் ஆகியவற்றுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

சோப், தலைக்கு தேய்க்கும் எண்ணை, ஹேர் ஆயில், பிஸ்கட், டீ, டெய்ரி பொருட்கள் போன்றவற்றுக்கு 10 சதவீதம் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். டூத்பேஸ்ட், டயாப்பர் போன்றவற்றுக்கு 15 சதவீதம் அளவுக்கும், அகர்பத்தி, முந்திரி கொட்டை, வெஜிட்டபிள் 22 சதவீதம் அளவுக்கு டிஸ்கவுண்ட் வழங்கப்படும்.

ஜிஎஸ்டி வரி பயனை உடனே வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதே இதன் நோக்கம் என்று பிக்பஜார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல மேலும் சில நிறுவனங்களும் கடைகளை திறந்துவைத்திருப்பதால் தீபாவளி விற்பனையை போல விடியவிடிய விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In line with the rollout of Goods and Services Tax (GST), Big Bazaar has come up with a two-hour shopping dhamaka. The Sale termed as ‘GST Muhurat Offer’ will start at midnight and will last till 2 AM and will take place at all Big Bazaar stores.
Please Wait while comments are loading...