ஜூலிக்கு ஒரு நியாயம், அவருக்கு ஒரு நியாயமா? கமல் ஓரவஞ்சனை.. பாயும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டில் போலியாக நடித்து அட்டகாசம் செய்து வந்த ஜூலியை கடும் வார்த்தைகளால் கண்டித்த கமல்ஹாசன், காயத்ரி ரகுராமை மென்மையாக கையாண்டது சமூக வலைத்தளத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தள கருத்துக்களை அடிப்படையாக வைத்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போக்கு நிர்ணயிக்கப்பட்டுவருகிறது என்பதால், இந்த கண்டனங்களை கமல் அடுத்த நிகழ்ச்சியின்போது கருத்தில் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

காயத்ரி ரகுராமின் தந்தை கமலுக்கு நண்பர் என்பதே பாரபட்சத்திற்கு காரணம், ஜூலி செலப்ரிட்டி இல்லை என்பதால் எளிதாக அவர் மீது கோபத்தை காட்ட முடிந்தது என்றெல்லாம் விதவிதமான ககாரணங்களால் கமலை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள். ஜூலியை திட்டியதிலும், அம்பலப்படுத்தியதிலும் நெட்டிசன்களுக்கு ஏக குஷி என்றபோதிலும், காயத்ரி தப்பியதில் அவர்களுக்கு திருப்தியில்லை.

இதோ கருத்துகளை பாருங்கள்.

ராதிகா மாடுலேசனில் படிக்கவும்

ஓவியா பன்னினு சொன்னத கேக்க தெரியும்.. ஜூலி பண்ண ப்ராடுதனத்தை கேக்க தெரியும்.. ஆனா காயத்ரி பண்ண சில்றத்தனத்தை மட்டும் உமக்கு கேக்க தெரியாதோ??

காயத்திரியை கண்டிக்கலியே

தலைவரே இன்னிக்கு கலக்கல்...ஆனா அதே வீரியத்தோட காயத்ரி பயன்படுத்தும் வார்த்தைகள், "வெளிய வா பார்த்துக்கறேன்னு" சொல்றதையும் கேட்டிருக்கலாம், என்கிறார் இவர்

ஜூலிக்குதான் குறி

கேம் என்னன்னா ஜூலிய வெளிய அனுப்புறது இல்ல கேவலபடுத்து வெளிய அனுப்புறதுதான் போல ஆண்டவர் கேம்

ஜூலியிடம் ஆவேசம்.. காயத்ரியிடம் மென்மை

Too rude.. இதே வேகத்தை காயத்ரியிடம் காட்டாதவரை உலகநாயகனை கொண்டாட ஒன்றுமில்லை!

கண்டிப்போம், கண்டிப்போம்

'அரைமணி நேரம் கேமரா ஆஃப் பண்ணினா நடக்கறதே வேறனு சொல்ற அளவு வன்முறை ஊறி இருக்கற காயத்ரியை ஆண்டவர் @ikamalhaasan கண்டிக்காட்டி நடக்கறதே வேற" என முன்கூட்டியே கமலுக்கு அப்ளிகேஷன் போட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens gets anger as Kamal Hassan didn't act against his friend's daughter Gayathri Rahuram at Biggboss.
Please Wait while comments are loading...