குழந்தை திருட்டை தடுக்க அதிரடி முடிவு எடுத்த கீழ்ப்பாக்கம் மருத்துவமனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு மருத்துவமனைகளில் குழுந்தை திருட்டுச் சம்பவங்களை கட்டுபடுத்தும் விதமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அடிக்கடி குழுந்தைகளை திருடும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பல சிக்கல் இருந்து வந்தது.

 Bio Metric method introduced in Kilpauk hospital

இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் பயோ மெட்ரிக் முறையை சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநபர்கள் யாரும் உள்ளே வரமுடியாது. மேலும் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் குழந்தைகளின் தாயார்கள் மட்டும் உள்ளே சென்று வரமுடியும்.

இந்த பயோ மெட்ரிக் முறையால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க முடியும் என்கிறார்கள். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் இந்த பயோ மெட்ரிக் முறையை கொண்டு வந்தால், குழுந்தைகள் திருட்டை ஒழிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bio Metric method introduced in Kilpauk hospital to stop kidnapping of the children
Please Wait while comments are loading...