அண்ணா வந்தாலே பாஜகவில் தான் சேருவார்... முரளிதரராவ் பேச்சால் சர்ச்சை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பேரறிஞர் அண்ணா இன்று திரும்பி வந்தாலும் பாஜகவில் தான் இணைவார், திமுகவில் இணையமாட்டார் என்று முரளிதரராவ் பேசி இருப்பது திமுக, பாஜக இடையே முட்டலை உருவாக்கியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமையில் உறுப்பினர்கள் சில பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சி திருநெல்வேலி ஜவஹர் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவும் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் மேடையில் எம்ஜிஆர் நடித்த நான் உங்கள் வீட்டு பிள்ளை பாடல் ஒலித்தது, ஆனால் இரண்டாவது வரியை கேட்ட மாத்திரித்தில் கூட்டத்தினர் அதிர்ச்சியில் அமைதியாகினர். ஆம் பாடலின் இரண்டாவது வரி என்ன தெரியுமா 'நான் செல்லுகின்ற பாதை நரேந்திர மோடி காட்டும் பாதை'. இந்த வரிகளைக் கேட்டு பாஜகவினர் மகிழ்ந்தனர், ஆனால் கூட்டத்தினர் இதை ரசிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கருணாநிதி இல்லாத அரசியல்

கருணாநிதி இல்லாத அரசியல்

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முரளிதரராவ், கருணாநிதி இல்லாமல் ஸ்டாலினால் அரசியலை செய்ய முடியவில்லை. இதனால் தான் அவர் ராகுல் காந்தியுடன் கைகோர்க்கிறார், ஆனால் ஸ்டாலின் ஒன்றை மறந்து விடக்கூடாது உத்திரப்பிரதேச மாநில தேர்தல் தோல்விக்கு ராகுல் தான் காரணம் என்றார்.

ஸ்டாலினுக்கு சவால்

ஸ்டாலினுக்கு சவால்

அதிமுகவும், திமுகவும் 1967 முதல் 2017 வரை தமிழகத்தில் ஆட்சி செய்கின்றன. ஆனால் இது வரை ஊழைலைத் தவிர எதையும் செய்யவில்லை. நான் ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுகிறேன், தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் வரிகளை உங்களில் யார் பின்பற்றுகிறீர்கள். பாஜகவும் ஊழலற்ற தலைவர்களும் மட்டுமே திருவள்ளுவரை பின்பற்றுகின்றனர்.

அண்ணா வந்தால்

அண்ணா வந்தால்

பேரறிஞர் அண்ணா ஒரு வேளை திரும்பி வந்தால் கூட அவர் பாஜகவில் தான் இணைவார். நிச்சயமாக அவர் திமுகவை தேர்வு செய்யமாட்டார். ஏனெனில் பாஜக மட்டுமே ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனின் ஆட்சியை தமிழக மக்களுக்கு அளிக்கும் என்று பேசினார்.

பாஜக நிலைமை மோசமாகிவிட்டத

பாஜக நிலைமை மோசமாகிவிட்டத

முரளிதரராவ் கருத்துக்கு பதில் அளித்துள்ள திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சூழ்நிலை இன்றைக்கு பாஜகவுக்கும் வந்துவிட்டது. அவர்களின் மனதில் அண்ணாவை வைத்து, இன்றைக்கு நினைவுபடுத்தியதற்காக திமுகவின் சார்பில் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை

மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை

கடந்த மூன்றரை ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் உள்ள பாஜக ஆட்சி எதையுமே செய்யவில்லை. இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்தவொரு பயனுமே கிடைக்கவில்லை. எனவேதான், அதையெல்லாம் திசை திருப்பும் வகையில் இப்படிப்பட்ட பிரசாரத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Muralidhara rao speech over Anna , sparks row between BJP and DMK and Stalin replied him that finally BJP also in a situation to do politics with the name of C.N. Annadurai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற