For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவுகாத்தி எக்ஸ்பிரஸில் சென்னை சென்ட்ரலில் தான் குண்டு வைக்கப்பட்டது: விசாரணையில் புதிய தகவல்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பிறகே அதில் குண்டு வைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயிலில் வைக்கப்பட்ட 2 குண்டுகள் வெடித்ததில் பெங்களூர் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்த ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி பரச்சூரி(22) பலியானார். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர்.

Bombs kept in Guwahati express after it reached Chennai central

இந்நிலையில் காலை 7.10 மணிக்கு ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரம் எண் 9க்கு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸில் 7.18 மணிக்கு மர்மநபர் குண்டுகளை வைத்துவிட்டு தப்பியோடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குண்டு வைத்த நபரை அடையாளம் காண ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

English summary
Police found out that bombs were kept in the ill fated Guwahati express only after it reached Central central.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X