சென்னையில் அரசு பஸ்கள் இயக்கம் குறைப்பு.. மக்கள் அவதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையால் பல அரசு பஸ்கள் பழுதடைந்துள்ளதால், சென்னையில் இயங்கும் அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 25 சதவீதம் அளவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. மழை காரணமாக பழுதடைந்த பஸ்கள் பலவும் டெப்போவில் நிற்பது, டிரைவர், நடத்துநர்கள் உரிய நேரத்திற்கு டெப்போவுக்கு வந்து சேர முடியாதது, பள்ளி, கல்லூரிகள் விடுமுறை போன்ற காரணங்களால் பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

Bus operations reduced in Chennai due to rain

இதனால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் மக்கள் பஸ்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். மழையை காரணம் காட்டி டாக்சி நிறுவனங்கள் பல இடங்களுக்கும் இயயங்க மறுக்கும் நிலையையும் பார்க்க முடிகிறது. ஆட்டோ ஓட்டுநர்களும் வெள்ளத்தை காரணமாக காட்டி கூப்பிட்ட இடங்களுக்கு வர மறுப்பதால் மக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bus operation reduced in Chennai as many buses got repaired due to the rain.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற