For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைத்தேர்தலில் பணநாயகம் மீண்டும் வென்றுள்ளது... ஆச்சரியம் இல்லையே...கருணாநிதி

இடைத்தேர்தல்களில் பணநாயகம் மீண்டும் வென்றிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்,

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இடைத்தேர்தலில் பணநாயகம் மீண்டும் வென்றுள்ளதாகவும் இதில் ஆச்சரியமோ புதுமையோ எதுவும் இல்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில், மூன்று தொகுதிகளிலும் வாக்களித்த 2,09,257 வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இடையறாதுழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், செயல் வீரர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும், எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

நாராயணசாமிக்கு வாழ்த்துகள்

நாராயணசாமிக்கு வாழ்த்துகள்

புதுவை நெல்லித் தோப்பு தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், அருமை நண்பர், புதுவை முதல்வர் வி. நாராயணசாமி அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆச்சரியம் அல்ல..

ஆச்சரியம் அல்ல..

தமிழகத்தில் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது ஒன்றும் ஆச்சரியமோ, புதுமையோ இல்லை. அதிகார பலம் மற்றும் துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் மறைமுக ஆதரவு, அங்கிங்கெனாதபடி எங்கும் பண விநியோகம் ஆகியவற்றுக்கு முன்னால், தி.மு. கழகத்தின் கடின உழைப்பு முக்கியமானதாகக் கருதிப் பார்க்கப்படவில்லை.

நாளைய நன்மை...

நாளைய நன்மை...

நாளை விளையும் நன்மையை விட, இன்று கைக்குக் கிடைக்கும் வாய்ப்பை எண்ணிக் களிப்புறும் போக்கு, ஆக்க பூர்வமான எதிர்காலத்திற்கு அடிப்படையாகாது என்பதை அனைவரும் உணர வேண்டுமென விரும்புகிறேன்.

வென்ற பணநாயகம்

வென்ற பணநாயகம்

பணநாயகம் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது; அதுவே இந்த இடைத்தேர்தல்! செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi said that the By-elections results anticipated in his statement today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X