ஆண்டிப்பட்டி அருகே பயங்கரம்: வேன்-கார் மோதி 6 பேர் பலி.. 25 பேர் படுகாயம்.. பலர் உயிர் ஊசல்!
கார்-வேன் மோதி சாலை விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி: ஆண்டிப்பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 4 ஆண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே சிம்மரச நாயக்கனூர் என்ற இடத்தில் மதுரை நோக்கி டாடா சுமோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதில் எதிர்பாராதவிதமாக டாடா சுமோ காரும்-வேனும் பலமாக மோதிக் கொண்டன.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமுற்றவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் தேனி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதில் பலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும், உயிருக்கு போராடி வருவோருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் டாடா சுமோ காரின் டயர் வெடித்ததாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications