For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்குமூலத்தை திருத்திய அதிகாரிக்கும் தூக்கு விதிக்க சட்டத்தில் இடம் உண்டு: தியாகு தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

'CBI official should be punished under IPC 194 on Rajiv case'
சென்னை: ராஜிவ் வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை திருத்தியததாக ஒப்புக் கொள்ளக் கூடிய அதிகாரிக்கும் தூக்கு தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உண்டு என்று தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.

ராஜிவ் வழக்கில் பேரறிவாளன் கொடுத்த ஒரிஜினல் வாக்குமூலத்தை மறைத்து தாம் வசதிக்கேற்ப வாக்குமூலத்தை திருத்தினேன் என்று 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்குமூலத்தை பதிவு செய்த அதிகாரியே தாம் பொய்யான வாக்குமூலத்தைக் கொடுத்தேன் என்று கூறியிருப்பதால் ராஜிவ் வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலரான தோழர் தியாகு, இந்திய தண்டனை சட்டம் 302ம் அதன் உட்பிரிவுகளும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்கிறது.

அதேபோல் இந்திய தண்டனை சட்டம் 194 என்பது பொய்யான ஆவணங்களை தயாரித்து ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிப்பது அல்லது தண்டனை நிறைவேற்றப்பட்டால் அப்படி ஆவணங்களைத் தயாரித்தோருக்கும் தூக்கு தண்டனை விதிக்கலாம் என்று சொல்கிறது. அதனால் இது தொடர்பாகவும் ஒரு வழக்கு தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தண்டனை பெற்றுத்தர முடியும் என்றார்.

தோழர் தியாகு சொல்வது போல் இந்திய தண்டனைச் சட்டம் 194வது பிரிவு சொல்வதுதான் என்ன? இதோ:

Section 194. Giving or fabricating false evidence with intent to procure conviction of capital offence

Whoever gives or fabricates false evidence, intending thereby to cause, or knowing it to be likely that he will thereby cause, any person to be convicted of an offence which is capital 1[by the law for the time being in force in 2[India]] shall be punished with 3[imprisonment for life], or with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine;

if innocent person be thereby convicted and executed.- and if an innocent person be convicted and executed in consequence of such false evidence, the person who gives such false evidence shall be punished either with death or the punishment hereinbefore described.

இப்படித்தான் சொல்கிறது 194வது பிரிவு....

English summary
Thamizhar Desiya Viduthalai Iyakkam leader Thozhar Thiyagu said, CBI official Thiyagarajan who makes false evidence in Rajiv case should be punished under IPC 194.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X