மழைக்காலத்தில் செல்போன் சேவை தடையின்றி கிடைக்கும்.. செல்போன் நிறுவனங்கள் உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழைக்காலத்தில் செல்போன் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செல்போன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மாநகர் ஒரு வாரத்திற்கும் மேலாக இருளில் மூழ்கியது. செல்போன் சேவையும் முடங்கியதால் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளமுடியாமல் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

Cell phone companies assured for continues service during rainy season

இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என கூறப்படுகிறது,

இதனை முன்னிட்டு செல்போன் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து
செல்போன் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செல்போன் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

பிஎஸ்என்எல் நிறுவனமும் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல் மின்சாரம் தடையின்றி கிடைக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu govt urges private cell phone companies for continues service during rainy season. Cell phone companies assured for continues service.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற