For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாட்டிறைச்சிக்குத் தடை இல்லை... மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தவே சட்டம்- தமிழிசை புது விளக்கம்

மத்திய அரசு மாட்டிறைச்சி விறபனைக்குத் தடை விதிக்கவில்லை. மாடு விறபனையை ஒழுங்குபடுத்தவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என தமிழக பாஜ தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கவில்லை. மாட்டு விற்பனையை ஒழுங்குபடுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் வீணாக இதை அரசியலாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மாட்டு இறச்சிக்கு மாடுகள் விற்பனை செய்யவோ அல்லது வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்தியா மாடு விற்பனை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா மற்றும் புதுவை முதலவர்கள் மாட்டிறைச்சி விறபனைக்கு தடை விதிக்க முடியாது என கூறியுள்ளனர்.

 Central government do not ban cow meat told Tamilisai, TN bjp leader

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும், விவசாய சங்கங்களும் இந்த தடையுத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை,'' மத்திய அரசு மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை என்று கூறவில்லை. மாடு விற்பனைக்குத்தான் தடை விதித்துள்ளது.

அதாவது மாடுகளை விவசாயத்துக்கும் வேறு விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறோம் என வாங்கிச் சென்று இறைச்சிக்காக வெட்டுவதைத்தான் ஒழுங்குபடுத்தியுள்ளது. மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தவே இந்த சட்டம். ஆனால், அதற்குள் எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்'' என கூறியுள்ளார்.

English summary
Central government do not ban cow meat and opposite parties unnecessarily politicizing this issue told Tamilisai, TN bjp leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X