நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்- கிரண்பேடி மீது நாராயணசாமி கடும் அட்டாக்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக மூன்று நியமன எம்.எல்.ஏக்களை நியமித்ததற்கு மத்திய அரசும் துணை நிலை ஆளுநரும் வெட்கித் தலை குனிய வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஆளும் கட்சி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக மூன்று நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தார். அந்த மூன்று எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

 Central government must feel very shame told Narayanasamy

கிரண் பேடியோ, சட்டத்துக்கு உடபட்டுத்தான் நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தேன். இதில் எந்த விதிமீறலும் இல்லை என்று கூறி வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை முதல்வர் நாராயணசாமி சந்தித்தார்.

மேலும், செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறிய முதல்வர் நாராயணசாமி, நியமன உறுப்பினர்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நியமனம் செய்தது குறித்து துணை நிலை ஆளுநரும் மத்திய அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என கூறினார்.

துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கும் இடையே தீராத பனிப்போர் நிலவி வருகிறது. இதில் ஒருவரையொருவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lt. general and central government should feel very shame on their activity said Chief minister Narayanasamy.
Please Wait while comments are loading...