For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் வறட்சி: மத்திய குழு இன்று பார்வை

புதுச்சேரியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு இன்று பார்வையிடுகின்றனர்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

புதுச்சேரி : புதுச்சேரியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு இன்று பார்வையிடுகின்றனர்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வறட்சி குறித்து பார்வையிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தினார். அதன்படி மத்திய வேளாண் துறை இணை செயலாளர் ராணி குமுதின் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு நேற்று புதுச்சேரிக்கு வந்தது.

 Central team in Puducherry to assess drought

நேற்று புதுச்சேரி தலைமைச் செயலகத்தில், தலைமை செயலாளர் மனோஜ் பரிதாவை சந்தித்து அக்குழு ஆலோசனை நடத்தியது. அப்போது வறட்சி குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை கொடுத்து தலைமை செயலாளர் அவர்களிடம் விளக்கினார்.

இதனைத்தொடர்ந்து , மத்திய குழு இரு அணிகளாக பிரிந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

மேலும் அந்த குழு மத்திய அரசிடம் வறட்சி குறித்த ஆய்வின் அறிக்கைகளை மத்திய அரசிடம் வழங்கும்.

முன்னதாக புதுச்சேரி அரசு வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி 100 கோடி நிவாரண தொகை வழங்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
A nine member central team, comprising officials from agriculture, home and finance ministry, reached Puducherry on Sunday evening to assess the drought situation in Puducherry and Karaikal regions of the Union Territory. The Centre will release assistance to the State after analysing the ground report. The team held a meeting with officials at Chief Secretariat here on Sunday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X