மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - வேல்முருகன் கோரிக்கை
சென்னை: நரிக்குறவர் வகுப்பினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது போல், மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளிக் கவுண்டர் ஆகிய வகுப்பினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையை ஏற்று செயல்பட்ட மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நடவடிக்கை மூலம் நரிக்குறவர் உள்ளிட்ட சமூகத்தினர் கல்வியிலும் வாழ்க்கையிலும் மேம்படைய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அந்த இன மக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதேபோல் தமிழக மீனவர்களை பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தமிழகத்தின் நெடுநாளைய கோரிக்கை. இதையும் மத்திய அரசு பரிசீலித்து மீனவர்களையும் பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசும் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications