ஆஹா சூப்பர்... அனல் காற்று எச்சரிக்கை வாபஸ்.. தமிழகம் முழுவதும் அருமையான மழைக்கு வாய்ப்பு
Recommended Video
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த நான்காம் தேதி தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்கியது. இந்த அக்னி வெயில் காரணமாக வெப்பம் அதிகரித்து இருந்ததால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

வெப்பச்சலனம் காரணமாக வளிமண்டல சுழற்சி மேலடுக்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவே இந்த மழையானது பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
நேற்று சில இடங்களில் சுறாவளி காற்றுடன் கன மழை பெய்து இருக்கிறது. இந்நிலையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் நேற்றைக்கு அனல் காற்று வீசும் என எச்சரித்த வானிலை மையம் இன்று அந்த எச்சரிக்கையை திரும்ப பெற்றுள்ளது. ஈரப்பதம் மற்றும் வெப்பசலனம் காரணமாக மழை பெய்துவருவதவால் அனல்காற்று வீசுவது தமிழகத்தில் குறைந்து இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இனிவரும்நாட்களில் அனல் காற்று முழுவதும் குறைவது மழைக்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications