வால்பாறை அருகே குழந்தையை கடித்து தின்ற சிறுத்தை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிறுத்தை கடித்து உயிரிழந்த குழந்தை-வீடியோ

  வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதியின் அருகே வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சிறுத்தை கடித்ததில் உயிரிழந்தது. சிறுத்தையை பிடிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

  வால்பாறையை அடுத்து நடுமலை எஸ்டேட் பகுதியில் செயுதுல் (4). இவர் தெருவில் விளையாடி கொண்டிருக்கும் போது சிறுத்தை நேற்று கவ்வி சென்றது . சுமார் 200-க்கும் மேற்பட்ட பொது மக்களும், வனத்துறையினரும் தேடினர்.

  Cheetah has taken the child from Valparai

  பின்னர் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேயிலைச் செடிகளுக்கு அடியில் தலை தனியாகவும் உடல் தனியாகவும் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.

  சம்பவம் அறிந்து காவல் துறையினர், வட்டாட்சியர் விரைந்தனர். மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A Cheetah takes away 4 year child near Valparai. Police finds the head and body of the child in tea estate. Relatives of the child involves in road roko.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற