மாமல்லபுரம் அருகே விபத்து.. ஸ்பாட்டில் தோழி இறப்பு.. வழக்கில் ஆஜராகாத யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில் யாஷிகாவின் தோழி ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளிச்செட்டி பாவனியுடன் (28) கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை வந்திருந்தார்.

ரிசார்ட்
இதையடுத்து புதுவையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இரவு பார்ட்டிக்காக ஆண் நண்பர்கள் சையத் (31), ஆமீர் (32 ) வள்ளிச் செட்டி பாவனி ஆகியோருடன் காரில் யாஷிகா சென்றிருந்தார். அப்போது இரவு பார்ட்டி முடித்துவிட்டு இவர்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நள்ளிரவில் காரில் திரும்பி கொண்டிருந்தனர்.

வேகமாக வந்த கார்
அப்போது கார் வேகமாக வந்ததாக தெரிகிறது. காரை யாஷிகா ஓட்டி வந்துள்ளார். மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடம் வந்ததும் கார் நிலைத்தடுமாறி சாலையில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த வள்ளிச் செட்டி பாவனி அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த யாஷிகா ஆனந்த்
மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் படுகாயமடைந்து அலறினர். இதையடுத்து அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் சிலர் மாமல்லபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் வந்து பாவனியின் சடலத்தை மீட்டனர். மேலும் காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதுகுதண்டில் சிகிச்சை
இந்த விபத்தில் யாஷிகாவிற்கு முதுகு தண்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த பாதிப்பிற்காக சில மாதங்கள் அவர் சிகிச்சை மேற்கொண்டார். இந்த காயத்திலிருந்து எப்படியோ மீண்டு வந்த யாஷிகா தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். எனினும் இந்த விபத்து தொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

யாஷிகாவுக்கு பிடிவாரண்ட்
இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராகுமாறு மார்ச் 21 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி, யாஷிகாவுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் யாஷிகா நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் தேதி யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவரை போலீஸார் கைது செய்ய வாய்ப்பிருக்கிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications