தென் தமிழக கடலோர பகுதிகளில் கடுமையான கடல் சீற்றம்.. மீனவர்களுக்கு வானிலை மையம் வார்னிங்!
தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் நிலவி வருவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் நிலவி வருவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடலில் ஏற்பட்ட இயற்கை மாற்றங்கள் மற்றும் தொலை தூர சலனங்களால் கடந்த 2 நாட்களாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய கடலோர பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

இதனால் மீனவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல்சீற்றம் நிலவி வருவதால் அலைகள் 2 மீட்டர் வரை இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
நீங்க நல்லா இருக்கோனும்..பார்ட்டி ஃபண்டை கட் செய்த விஜய்! குஷியில் வீடுகட்டுவோர்..ராடாரில் ஆபீசர்ஸ் -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications