For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை– பழனி ரயில் நேரத்தில் மாற்றம்– கட்டணமும் உயர்கின்றது

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் இருந்து செல்லும் பழனி- சென்னை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணமும் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி - சென்னை செல்லும் ரயிலானது மதுரையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட்டு வருகின்றது. வருகின்ற 13 ஆம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலானது தற்போதைய நேரமான இரவு 9 மணிக்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு பழனிக்கு வந்தடைவதற்கு பதிலாக இரவு 9.30 க்கு புறப்பட்டு காலை 7.30 என்ற நேரமாற்றத்துடன் பழனி ரயில் நிலையம் வந்தடையும்.

மறுமார்க்கமாக பழனியில் இருந்து சென்னைக்கு மாலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 4.50 க்கு வந்தடைவதற்குப் பதிலாக மாலை 6.15க்கு புறப்பட்டு - காலை 4.15க்கு சென்னை வந்தடையும்.

மேலும், சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்படுவதால் பழனி - சென்னை ரயிலின் கட்டணம் பொது வகுப்பு பெட்டிக்கு ரூ.165 இல் இருந்து ரூ.180 ஆக மாற்றப்படுகின்றது. 2 ஆம் வகுப்பிற்கான முன்பதிவுக் கட்டணம் ரூ.315இல் இருந்து ரூ.345 ஆக மாற்றமடைகின்றது.

இந்த வருடத்திற்கான ரயில்வே கால அட்டவணையானது செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai – Palani express train’s timing and rate changed because it will convert to super fast express.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X