பல்லி விழுந்த உணவை உட்கொண்ட காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் 44 பேருக்கு வாந்தி, மயக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்லி விழுந்த உணவை உட்கொண்டதில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் சிகிச்சை முடிந்து திருப்பியனுப்பப்பட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் அருகிலுள்ள காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் வழக்கம் போல நேற்று இரவு விடுதி உணவை உட்கொண்டுள்ளனர். உணவு உண்ட பின் இரவு 10.14 மணியளவில் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 44 மாணவிகளும் அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், சில மாணவிகள் ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 Chennai quaide millethe college students hospitalised due to have food which lizard falls

விஷமான உணவை உட்கொண்டதால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்களுக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்ததில் அதிர்ஷ்டவசமாக அனைத்து மாணவிகளும் உயிர் பிழைத்தனர். மாணவிகள் உட்கொண்ட சாப்பாட்டில் எஞ்சியிருந்தவற்றை சோதனையிட்ட போது மாணவிகள் சாப்பிட்ட சட்னியில் பல்லி விழுந்திருந்தது தெரிய வந்ததையடுத்து மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவிகள் மீண்டும் விடுதிக்கு திரும்பினர். கல்லூரி விடுதியில் நடந்த அசம்பாவித சம்பவத்தையடுத்து விடுதிக்கு ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Students decided to send blood letter to President-Oneindia Tamil

44 மாணவிகளுக்கு உடனடி சிகிச்சையளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் உயிர்பிழைத்தனர். எனினும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
44 students of Chennai Quiade milleth hospitalised due to have hostel food which was lizard fall on it fortunately all are safe and under treatment.
Please Wait while comments are loading...