அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...மழை கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வானிலை ஆய்வு மையம் வார்னிங்! -வீடியோ

  சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்கள் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் 'என்ன நடந்தா என்ன நாங்க மழை பெஞ்சா கவிதை எழுதியே தீருவோம்' என டிவிட்டரில் சிலர் மழை கவிதை எழுதி வருகின்றார். சுமார் ரக கவிதையில் இருந்து சூப்பர் ரக கவிதை வரை அனைத்தும் இதில் இருக்கிறது.

  அதுமட்டும் இல்லாமல் இதற்காக #மழை என்ற ஹேஷ்டேக்கை வேறு உருவாக்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   தொடங்கியது மழை

  தொடங்கியது மழை

  தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஒருவாரத்திற்கு முன்பு தொடங்க வேண்டிய மழை கொஞ்சம் தாமதமாக தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்கள் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிறைய பேர் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

   மழை ஹேஸ்டேக்

  மழை ஹேஸ்டேக்

  இந்த நிலையில் இன்று காலை டிவிட்டரில் மழை ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. முதலில் மழை குறித்த தகவல்கள் தெரிவிக்க உருவாக்கப்பட்ட இந்த டேக் இப்போது மழை கவிதைகளால் நிரம்பி வழிகிறது. எல்லாம் "வானமோ நீலம், நீதான் என் பாலம்" என்ற ரகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறைய சுமாரான கவிதைகள் இருந்தாலும் சில சூப்பரான கவிதைகளும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  டியர் சூரியன் தூங்குங்க பிளீஸ்

  மழை பற்றி இவர் எழுதியிருக்கும் இந்த டிவிட்டில் ''சூரியனை சீக்கிரம் தூங்க சொல்லுங்கப்பா, இங்க ஒரு இளந்தளிரை மழை நிர்வாணமாக்கி இருக்கிறது'' என்று கூறி எப்போது சாயங்காலம் வரும் என்பது போல கேட்டு இருக்கிறார். இவர் கவிதையின் படி இன்னும் சில மணி நேரத்தில் மாலை வேளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆபிஸ்லயும் கவிதை எழுதுவோம்

  இந்த நிலையில் சென்னையில் எந்த நிறுவனத்திலும் மழைக்கு விடுமுறை விடப்படவில்லை. இதன்காரணமாக பலர் மழையில் நினைத்தபடி வேலைக்கு சென்றனர். இதை கவிதையாகவே எழுதி இருக்கிறார் இவர். எனக்கு பதிலா மழை கண்ணீர்விட்டு அழுகுது என்று கூறியிருக்கிறார்.

  மழையே ஒரு கண்ணீர் மக்களே

  இந்த நிலையில் மழை பெய்வதே குடும்ப பிரச்சனை காரணமாகத்தான் என்று குறிப்பிட்டு இருக்கின்றார் இவர். இந்தக் கவிதையில் "மேகங்கிற கணவன் கிட்ட தோற்று போன வானங்கிற மனைவி கஷ்டப்பட்டு கண்ணீர் விடுறதுதான் மழை'' அப்படின்னு எழுதியிருக்காங்க.

  மழையும் குழந்தையும்

  இவர் இந்த டிவிட்டில் மழை நம்மை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் என்ற அர்த்தத்தில் எழுதி இருக்கிறார். அதில் ''மழை பெஞ்சு செடிலாம் துளிர் விடும், அதே போல மனுசங்க கிட்ட இருக்குற குழந்தைத் தனம் மழை பெஞ்சா உடனே வெளிப்படும் " என்று எழுதியிருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Due to the rainy season in Chennai, the hashtag #Mazhai (#மழை) has became viral in twitter. Most of the people writing poetry in this hashtag.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற