For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழையால் தொடரும் விடுமுறை... தேர்வுகள் தள்ளிப்போகுமா? - பெற்றோர்கள் கவலை

மழை காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அரையாண்டு தேர்வுகள் தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை மழை-நார்வே வானிலை ஆய்வு மையம் என்ன சொல்லுது?- வீடியோ

    சென்னை: சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழையால் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.

    வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இன்று மழையால் 10 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக இன்று 7வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாழ்வு நிலை

    தாழ்வு நிலை

    காற்றழுத்த தாழ்வுநிலையால் மேலும் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. சுகாதாரமான சூழல் நிலவினால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

    மாணவர்கள் ஜாலி- பெற்றோர்களுக்குக் கவலை

    மாணவர்கள் ஜாலி- பெற்றோர்களுக்குக் கவலை

    பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதியே பள்ளிகளுக்கு மழை விடுமுறை விடப்படுகிறது என்றாலும் இரண்டாம் பருவம் மிகக் குறுகிய காலம் என்பதால் பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி முடிக்காவிட்டால் அரையாண்டுத் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வது சிரமமாகிவிடும் என பெற்றோர்கள் குறிப்பாக பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    புக்ஸே தரவில்லை இன்னும்

    புக்ஸே தரவில்லை இன்னும்

    டிசம்பர் 7ஆம் தேதி முதல் அரையாண்டு, இரண்டாம் பருவத் தேர்வுகள் தமிழகத்தில் மாநில அரசு, தனியார் பள்ளிகளில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தேர்வுகள் குறிப்பிட்ட நாட்களில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல பள்ளிகளில் இன்னமும் புத்தகம் வழங்கப்படவில்லை என்றும், பாடங்கள் சரிவர நடத்த தொடங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    தள்ளிப் போன அரையாண்டு

    தள்ளிப் போன அரையாண்டு

    கடந்த 2015ஆம் ஆண்டு மழை வெள்ளம் காரணமாக 40 நாட்கள் வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் டிசம்பர் மாதம் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டும் அதே போல தேர்வுகள் தள்ளிப்போகுமா என்ற கவலை பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. மழையால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    With heavy rain pounding the many districts of Tamil Nadu , and a grim forecast ahead,Schools are closing continuously, parents worry half-yearly examinations of all state board schools.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X