For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 பொருட்கள் அடங்கிய பை அளித்த சென்னை சில்க்ஸ்: மருத்துவ முகாம்களும் கூட

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் நிவாரணப் பொருட்கள் வழங்கியதுடன், இலவச மருத்துவ முகாமையும் நடத்துகின்றனர்.

வரலாறு காணாத கனமழையால் சென்னை வெள்ளக்காடானது. வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த மக்களை ராணுவத்தினர், சக மக்கள் மீட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள், தன்னார்வலர்கள் உணவு, உடை, தண்ணீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

Chennai silks too helps flood affected people of Chennai

அரசியல் கட்சி தலைவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்குவதுடன் இலவச மருத்துவ முகாம்களும் நடத்துகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை பகுதியில் உள்ள மக்களுக்கு சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் நிவாரணப் பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கியுள்ளனர்.

அந்த பையில் சேலை, வேட்டி, துண்டு, பாய், பெட்ஷீட், அரிசி, மெழுகுவர்த்தி, நாப்கின், பினாயில், பேஸ்ட், பிரஷ், குளிக்கும், துவைக்கும் சோப்புகள், சர்க்கரை, உப்பு, பருப்பு வகைகள், எண்ணி, தண்ணீர் பாக்கெட்டுகள், பால் பவுடர் என 24 பொருட்கள் இருந்துள்ளது.

இது தவிர சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையுடன் சேர்ந்து இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறது.

English summary
Chennai silks has given relief materials to people of Chennai. It is also conducting free medical camps in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X