மலையேற்றத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலி... சென்னை ட்ரெக்கிங் கிளப் மூடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கோடை காலத்தில் டிரக்கிங் போகவே போகாதீங்க...வீடியோ

  சென்னை: மலையேற்றத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக சென்னையில் இருந்து 27 பேரை அழைத்து சென்ற சென்னை ட்ரெக்கிங் கிளப் மூடப்பட்டுள்ளது.

  சென்னை பாலவாக்கத்தில் வீடு ஒன்றையே அலுவலகமாக மாற்றி செயல்பட்டு வந்துள்ளது சென்னை ட்ரக்கிங் கிளப். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் என்பவர் இதனை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் தன்னார்வலர்களான நிஷா, திவ்யா என்ற 2 பேர் தலைமையில் தான் குரங்கணி மலைக்கு சென்னையில் இருந்து 27 பேர் மலையேற்றத்திற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

  Chennai Trekking club closed after Kurangani fire accident

  மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கென சிறப்பாக இந்த மலையேற்றமானது மார்ச் 10, 11ல் திட்டமிடப்பட்டிருந்துள்ளது. இதன்படி ஆன்லைன் மூலம் புக் செய்யப்பட்டு 27 பேர் மலையேற்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

  நேற்று மலையேற்றம் முடிந்து கீழே திரும்பிக் கொண்டிருந்த போது தான் தீ விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து சென்னை பாலவாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை ட்ரெக்கிங் கிளப் மூடப்பட்டு, அந்த நிறுவனத்தின் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai trekking club closed after Kurangani fire accident, name boards of Chennai trekking club removed and the office closed.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற