9 பேரின் மரணத்திற்கு காரணமான சென்னை டிரெக்கிங் கிளப்.. யார் இவர்கள்... என்ன பின்னணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  9 பேரின் மரணத்திற்கு காரணமான சென்னை டிரெக்கிங் கிளப்- வீடியோ

  சென்னை: தேனி குரங்கணி காட்டு தீ காரணமாக மொத்தம் 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த மலை ஏற்றத்திற்கு சென்னை டிரெக்கிங் கிளப் என்ற நிறுவனம்தான் ஏற்பாடு செய்து இருக்கிறது.

  சென்னை டிரெக்கிங் கிளப் பீட்டர் வேன் கெயிட் என்று பெல்ஜியம் நாட்டை சேர்ந்த நபரால் தொடங்கப்பட்டது. முதலில் மிகவும் சிறிய நிறுவனமாக தொடங்கப்பட்டது.

  இந்த குழு வாராவாரம் நிரைய டிரிப், மலையேற்றம் ஆகியவற்றை ஏற்பாடு செய்து வருகிறது. தேனியில் காட்டுதீ ஏற்பட்டு இருக்கும் போது இவர்கள் எப்படி அங்கே மலையேற்றத்தை ஏற்பாடு செய்தார்கள் என்ற கேள்வி எழும்பி இருக்கிறது.

  வளர்ந்தது

  வளர்ந்தது

  இந்த கிளப் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த நிறுவனம் பெரிதாக வளர்ந்தது. தற்போது 50 ஆயிரம் பேர் வரை இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வைத்து இருக்கும் கூகுள் குரூப்களில் இணைவது மிகவும் எளிதான ஒன்று என்பதால் பலர் இதில் செயல்பட்டு வருகிறார்கள்.

  எப்படி

  எப்படி

  இந்த குழு மிகவும் எளிமையாக இயங்கி வருகிறது. இவர்கள் டிரிப் ஏற்பாடு செய்யும் போது அதற்கான மெயில் நமக்கு வரும். அந்த டிரிப் நமக்கு ஏற்றதாக இருந்தால், நாம் இணைந்து கொள்ளலாம். எவ்வளவு கொடுக்க வேண்டும், என்ன விதி என்று மெயிலில் தெரிவிக்கப்படும்.

  தூய்மை பணிகள்

  தூய்மை பணிகள்

  பொதுவா சென்னையில் ஐடி கம்பெனிகள் இருக்கும் பகுதிகளை சுற்றி நிறைய தூய்மைப்படுத்தும் பணிகளை இவர்கள் செய்வார்கள் . இதற்கான மெயில் வாராவாரம் வரும். எந்த பகுதியில் தூய்மை பணி நடக்கிறது, யார் ஒருங்கிணைக்கிறார்கள் என்று தகவல் தரப்படும். சமயங்களில் நீர்நிலைகளை கூட சுத்தம் செய்வார்கள்.

  இல்லை

  இல்லை

  தற்போது வரை இந்த குழுவை தொடங்கிய பீட்டர் வேன் கெயிட் தேனி சம்பவம் குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒரு வார்த்தை கூட அது குறித்து பேசவில்லை. இவருடன் அந்த குழுவில் இருக்கும் நபர்களே அதிகமாக பேசியதில்லை என்று கூறப்படுகிறது.

  அடங்க மறுக்கிறார்கள்

  அடங்க மறுக்கிறார்கள்

  இந்த சம்பவம் நடந்து கொண்டு இருக்கும் இதே நேரத்தில் 10.30 மணிக்கு அதே நிறுவனத்தில் இருந்து, அந்த குழுவில் இருக்கும் மக்களுக்கும் மெயில் ஒன்று அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் இந்த மாத இறுதியில் சேலத்தில் நடக்கும் பைக் பயணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். ஆனால் தேனி குறித்து எந்த வார்த்தையும் அந்த குழுவில் தெரிவிக்கப்படவில்லை.

  பிரச்சனை

  பிரச்சனை

  ஏற்கனவே இவர்கள் நடத்திய சில டிரெக்கிங் நிகழ்வுகளில் சிலர் மரணம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்கள். இந்த நிறுவனம் குறித்து உண்மையான பல விவரங்கள் இனிதான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Wild fire strikes in Theni kills 8 girl student. 25 more college girl rescued from inside the fire area. Kerala police extends their help on recue operation in Theni Forest Fire. Defence Minister Nirmala Seetharaman says that ALH helicopter will help in Theni rescue operation.Chennai Trekking Club is the reason behind Theni Forest Fire deaths

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற