மராட்டியர் ரஜினி ... அட நிதின்கட்காரி சொன்னது உண்மைதாங்கோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் ஒரு மராட்டியர்; அதனால்தான் அவரது வீட்டில் பிரமாண்ட வீர சிவாஜி படத்தை மாட்டி வைத்திருக்கிறார் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருப்பதை ரஜினிகாந்த் தரப்பு வெளியிட்ட புகைப்படம் உறுதி செய்திருக்கிறது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கன்னடரான ரஜினிகாந்த், தமிழக அரசியலுக்கு தேவை இல்லை என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

மராட்டியர் ரஜினிகாந்த்

மராட்டியர் ரஜினிகாந்த்

இந்த சூழலில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியோ, ரஜினிகாந்த் மராட்டியர். அவர் ஒரு மராட்டியர் என்பதாலேயே வீரசிவாஜி படத்தை வீட்டில் பெரிதாக வைத்திருப்பார். ரஜினிகாந்த் சேருவதற்கு பாஜகதான் சரியான கட்சி என கூறியது புதிய பஞ்சாயத்தை ஏற்படுத்தியது.

அர்ஜூன் சம்பத் சந்திப்பு

அர்ஜூன் சம்பத் சந்திப்பு

இந்நிலையில் ரஜினிகாந்தை பல்வேறு அமைப்பினர், இயக்க நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தும் ரஜினியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

வீரசிவாஜி படம், வீரவாள்கள்

வீரசிவாஜி படம், வீரவாள்கள்

இது தொடர்பான புகைப்படங்களில் நிதின் கட்காரி சொன்னதைப் போலவே ரஜினிவீட்டில் பெரிய வீரசிவாஜி படமும், வீரவாள்களும் இடம்பெற்றிருக்கின்றன. மகராஷ்டிராவில் இந்துக்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக சிவாஜி பார்க்கப்படுகிறார்.

இந்துத்துவா அமைப்பு

இந்துத்துவா அமைப்பு

இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளும் சிவாஜியை இந்துத்துவத்தின் குறியீடாக முன்வைக்கின்றன. ரஜினிகாந்தை அரசியல் களத்துக்கு கொண்டுவருவதே பாஜகதான் எனவும் கூறப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A big photo of Chhatrapati Shivaji Maharaj in Rajini House ecoes his ideology.
Please Wait while comments are loading...