
சென்னை: தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவர்களின் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ரூ.210 கோடி ஒதுக்கீடு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு 210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
|
முந்திரி திராட்சை
பொங்கல் பையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 20 கிராம் உலர்ந்த திராட்சை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

முதல்வர் அறிவிப்பு
பொங்கலுக்கு முன்னரே நியாயவிலைக்கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கும்..
முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!