நாளை காலை சரியாக 10 மணிக்கு.. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போகிறார் எடப்பாடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை செல்கிறார்.

அதிமுக மூன்றாக உடைந்துள்ள நிலையில் அதிமுகவின் தலைமை அலுவலகம் யாருக்கு என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் தலைமைக் கழகத்தில் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.

Chief minister Edappadi palanisami going to ADMK head office tomorrow

இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து கட்சிக்கான புதிய நிர்வாகிகளையும் டிடிவி தினகரன் அறிவித்தார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்திற்கு நாளை காலை 10 மணிக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

Minister Vijayabaskar's assets are freezing-Oneindia Tamil

டிடிவி தினகரன் தன் பங்குக்கு கட்சி நிர்வாகிகளை அறிவித்துள்ள நிலையில் நாளை முதல்வர் தனது ஆதரவு நிர்வாகிகளை சந்திக்க இருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief minister Edappadi palanisami going ADMK head office tomorrow. He is going meet Party leaders and ministers.
Please Wait while comments are loading...