காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி பெறப்படும்.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல விரைவில் முதல்வரின் அனுமதி பெறப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். காட்டுப்பன்றிகளை சுட வன உயிரின சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரின் போது மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சின்னராஜ் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அதிகமாக உள்ள காட்டுப்பன்றிகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதாக கூறினார்.

 Dindigul Srinivasan

இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் திட்டம் தீவிர பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.

காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல விரைவில் முதல்வரின் அனுமதி பெறப்படும் என்றும் அவர் கூறினார். விளைநிலங்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட அனுமதி பெறப்படும் என்று கூறிய அவர் காட்டுப்பன்றிகளை கொல்வதற்கு ஏற்ப வன உயிரின சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Dindigul Srinivasan said that the Chief Minister's permission would soon be taken to shoot the wild boar. Minister of Forests Dindigul Srinivasan said that the wildlife law will be revised to kill the wild boar.
Please Wait while comments are loading...