பாத்ரூமுக்கு போன புவனேஸ்வரி.. பகீரை கிளப்பிய குரங்கு.. உண்மையிலேயே "அது"தான் காரணமா!
குழந்தையை தூக்கி சென்று சாகடித்துள்ளது ஒரு குரங்கு
தஞ்சை: புவனேஸ்வரி பாத்ரூம் சென்றபோதுதான், அந்த கொடுமை நடந்துள்ளது... 2 குழந்தைகளையும் குரங்கு தூக்கி சென்றதில், ஒருகுழந்தை இறந்துவிட்டது.. இது சம்பந்தமான பல கேள்விகளும், சந்தேகங்களும் கிளம்பி உள்ளன.
தஞ்சை மாவட்டம் மேலேஅரங்கத்தை சேர்ந்த தம்பதி ராஜா புவனேஸ்வரி.. ராஜா ஒரு பெயிண்ட்டர்... இவர்களுக்கு கடந்த வாரம்தான் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியியில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இந்த குழந்தைகள் பிறந்து 8 நாள் ஆனநிலையில், கடந்த 13-ம் தேதி, 2 பேரையும் வீட்டில் தூங்கவைத்துவிட்டு, புவனேஸ்வரி பாத்ரூமுக்கு சென்றுள்ளார்..

அட்டகாசம்
அந்த நேரம் பார்த்து, குரங்குகள் கூட்டம் ஒன்று, புவனேஸ்வரியின் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி விட்டது.. அங்கே தூங்கி கொண்டிருந்த 2 பச்சிளம் குழந்தைகளை தூக்கி சென்றுவிட்டது. இதனால் குழந்தைகள் 2 பேரும் அலறி கத்தி உள்ளனர்.. அந்த சத்தம் கேட்டு பாத்ரூமில் இருந்து ஓடிவந்தார் புவனேஷ்வரி.. அப்போதுதான் குரங்குகள் கையில் குழந்தைகள் இருப்பதை கண்டு அலறினார்..

குழந்தை
அவரும் கத்தி கூச்சலிட்டார்.. அந்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் திரண்டு விட்டனர்.. ஆட்கள் கூடிவிட்டதால், ஒரு குரங்கு, ஒரு குழந்தையை மட்டும் வீட்டின் மேற்கூரையிலேயே வேகமாக வீசி விட்டு சென்றது.. இதையடுத்து அந்த குழந்தையை அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர்...

புகார்
ஆனால், இன்னொரு குழந்தையை குரங்கு இறுக்க பிடித்து கொண்டிருந்தது.. அதனால் அந்த குரங்கை பொதுமக்கள் விரட்டி பிடிக்க முயன்றனர்.. உடனே அந்த குரங்கு, குழந்தையை தூக்கி அங்கிருந்த அகழியில் வீசியது.. வேகமாக வீசியதில் குழந்தை அடிபட்டு இறந்தே விட்டது.. இது தெரியாமல் அக்கம்பக்கத்தினர் எங்கெங்கோ தேடி சென்று, இறுதியில்தான் அகழிக்குள் குழந்தை சடலமாக இருந்ததை கண்டனர்.. இதுகுறித்து தஞ்சை மேற்கு ஸ்டேஷனுக்கு புகார் தரவும் விசாரணை நடந்து வருகிறது..

புகார்
அந்த பகுதியில் நிறைய குரங்குகள் தொல்லை இருப்பதாக மாவட்ட ஏற்கனவே கலெக்டரிடமும், வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தரப்பட்டுள்ளதாம்.. ஆனாலும் உரிய நடவடிக்கை இல்லை என்று பொதுமக்கள் கொந்தளித்து சொல்கிறார்கள். குழந்தையை குரங்கு தூக்கி சென்று வீசி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஒருசேர ஏற்படுத்தியது. குரங்கு தூக்கி சென்று கீழே போட்டதில் குழந்தை இறந்துவிட்டதாக புவனேஸ்வரியே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

வாழைப்பழம்
இதையடுத்து, குரங்குகளைப் பிடிக்க 8 இடங்களில் உடனடியாக கூண்டுகள் வைக்கப்பட்டன. இந்த 8 கூண்டுகளிலும் குரங்குகளுக்கு பிடித்தமான வாழைப்பழம் போன்ற உணவு வைக்கப்பட்டது... இதில் நேற்றிரவு அந்த 8 கூண்டுகளில் சுமார் 25 குரங்குகள் பிடிப்பட்டன. இப்போது இது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன..

நகக்கீறல்
இறந்த குழந்தையை டாக்டர்கள் செக்கப் செய்துள்ளனர்.. வனத்துறையினரிடமும் விவரங்களை கேட்டறிந்துள்ளர்.. ஆனால், குழந்தையின் உடலில் குரங்கின் நகக்கீறல் இல்லை என்கிறார்கள்.. ஒரு சின்ன காயம்கூட இல்லையாம்.. அதுமட்டுமில்லை.. குரங்கின் ரோமம்கூட குழந்தையின் உடம்பில் எங்குமே இல்லை என்றும் கூறப்படுகிறது..

வனத்துறை
குரங்கு குழந்தையை தூக்கி கொண்டு சென்றால், அவ்வளவு லேசில் விட்டுவிடாதாம்.. அதேபோல, 8 நாள் குழந்தையை ஒரே கையில் தூக்கி கொண்டும் குரங்கால் ஓட முடியாது.. என்ற யதார்த்த உண்மையும் உள்ளது. இது எல்லாமே வனத்துறையினரின் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.. இன்னும் அந்த குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை.. அது வந்தால்தான் முழு விவரம் தெரியும் என்கிறார்கள் வனத்துறையினர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications