For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோழி ஜெயலலிதா இறந்ததை அறியாமலேயே மரணத்தைத் தழுவிய சோ

மூத்த பத்திரிகையாளரான சோ ராமசாமி இன்று காலை காலமானார். அவருக்கு தனது நெருங்கிய நண்பரான முதல்வர் ஜெயலலிதா இறந்தது தெரியாது என தெரிய வந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த பத்திரிகையாளரும் துக்ளக் இதழின் ஆசிரியருமான சோ ராமசாமி இன்று காலை காலமானார். அவர் தனது நெருங்கிய நண்பரான முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தது தெரியாமலேயே உயிரிழந்துள்ளார்.

சோ ராமசாமி பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர், நடிகர் என பன்முகத் தன்மைக்கொண்டவர். கடந்த சில மாதங்களகாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Cho died without knowing his close friend's death!

இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மருத்துவமனையில் மூச்சுதிணறல் காரணமாக அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கைத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சோ ராமசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் ஆவர். ஜெயலலிதா அரசியல் தொடர்பாக சோவிடம் ஆலோசனை கேட்பார், அவரது ஆலோசனைப்படி நடப்பார் என கூறப்படுவதும் உண்டு.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானர். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவு செய்தி சோவுக்கு தெரிவிக்கப்படவில்லை என தற்போது தெரியவந்துள்ளது. தனது நெருங்கிய நண்பர் உயிரிழந்தது தெரியாமலேயே அடுத்த 2 நாட்களுக்கு சோ ராமசாமி உயிரிழந்துள்ளார்.

English summary
Senior journalist, Editor of Tughlaq Cho Ramaswamy died this morning. He died without knowing that his Close friend Chief Minister Jayalalitha's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X