For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமல், ரஜினியின் நட்சத்திர அந்தஸ்து தமிழக அரசியலுக்கு துளியும் உதவாது: ஜெ.தீபா

கமல் ரஜினியின் நட்சத்திர அந்தஸ்து அரசியலில் மக்களிடம் எடுபடாது என்று ஜெ.தீபா குறிப்பிட்டுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

திருச்சி : கமல், ரஜினி என சினிமாவில் இருந்து யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களின் நட்சத்திர அந்தஸ்து மக்களிடம் எடுபடாது என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தலைமை வகித்தார்.

Cinema fame will not help to attract people says J Deepa

கூட்டத்தில் ஜெ.தீபா தனது தொண்டர்களிடத்தில் உரையாற்றினார். அப்போது, நாளைய தினம் வரலாற்று சிறப்பு மிக்கது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை மாவட்டம் தோறும் பேரவை நிர்வாகிகள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

விரைவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வழியில் நல்லாட்சி வழங்கும் நாட்கள் நமக்கும் கிடைக்கும். அதுவரை அனைவரும் உற்சாகமாக மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடத்தில் பேசுகையில், என் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. அதற்காக நான் போலீஸ் பாதுகாப்பு கோரமாட்டேன். கமல் அரசியல் அறிவிப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கும் கருத்து ஏற்புடையது அல்ல.

ஆனால், கமல் ரஜினி என யார் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் அந்த நட்சத்திர அந்தஸ்து மக்களிடம் எடுபடாது. அதற்கு களத்தில் இறங்கி உழைக்க வேண்டும் என்று ஜெ.தீபா குறிப்பிட்டுள்ளார்.

English summary
Cinema fame will not help to attract people says J Deepa. She also added that Kamal and Rajini must come to people front and fight fior their needs. J Deepa Party meeting Held on Trichy today .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X