தூத்துக்குடி அருகே வெளியூர் தொழிலாளர்களிடையே மதுபோதையில் தகராறு.. ஒருவர் கொலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: வெளியூர் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

தூத்துக்குடியில் கட்டுமான பணிக்காக வெளியூர்களில் இருந்து வந்து தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அனல்மின் நிலைய குடியிருப்பில் அவர்களுக்கு இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.

Clash between workers in Tuticorni One killed

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மணி கண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோபி என்பவரை கைது செய்து தெர்மல் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியூர் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் ஒருவர் கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Clash between workers in Tuticori One killed. construction wagers working in tuticorin. clash between them due liquor one person killed named Manikandan.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற