பெரும்பாக்கத்தில் 45 நிமிடத்தில் 100 மி.மீ., மழை கொட்டித்தீர்த்தது - தமிழ்நாடு வெதர்மேன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் சென்னையில் வானம் வெடித்து கொட்டியது மழை கொட்டித் தீர்த்தது. பெரும்பாக்கத்தில் மட்டும் 45 நிமிடத்தில் 100 மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காலை முதலே தென் சென்னையில் வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது. 2015ல் வெள்ளம் வராமல் தப்பிய பகுதியான மயிலாப்பூரில் ஒருநாள் பெய்த மழைக்கு வெள்ளம் சூழ்ந்தது. இன்றைய மழை வெள்ளம் மயிலாப்பூர்வாசிகளை சற்றே அச்சத்தில் ஆழ்த்தியது.

Cloudburst in OMR and southern suburbs of Chennai

இன்றைய மழை வெள்ளம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன். பெரும்பாக்கத்தில் மேக வெடிப்பு போல வானம் கொட்டியது. தற்போது பெய்து வரும் கடும் மழை அப்படியே வடசென்னை, மத்திய சென்னை என்று ஆக்கிரமிக்க உள்ளது.

தற்போது மத்திய சென்னை, வடசென்னை பகுதிகளில் அவ்வப்போது கடும் மழை பெய்து வருகிறது. இனி இந்த மழை கன மழையாக மாறும் என்று பிரதீப் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று மாலை ஓஎம் ஆர் சாலையில் பலத்த மழை பெய்தது. பெரும்பாக்கத்தில் மட்டும் 45 நிமிடத்தில் 100 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் சென்னையின் பல இடங்களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பணி முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் இந்த மழைக்கே தெரு விளக்குகள் எரியவில்லை. நடந்து செல்பவர்கள் கடும் பாதிப்ப்புக்கு ஆளாகியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cloudburst in OMR and southern suburbs of Chennai city, the downpour was so intense that 100 mm was recorded in just 45 mins in Perumbakkam near OMR in a private weather station.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற