தினகரன் வீடு அருகே.. ஓபிஎஸ், இபிஎஸ் கொடும்பாவிகளை எரித்துப் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாறில் தினகரன் வீட்டருகே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.

அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் பல்வேறு தடைகளை மீறி இன்று வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கூடியது. இதில் சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

CM and Dy CM's effigy are burnt by Dinakaran supporters

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவாளர்கள் ஆங்காங்கே முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் அடையாறில் உள்ள தினகரன் வீட்டருகே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் உருவபடங்களை காலணியால் போட்டு அடித்தனர்.

பின்னர் அவர்களுக்கு எதிரான கோஷங்களை இட்டனர். இதைத் தொடர்ந்து அந்த உருவபொம்மைகளை எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM and Dy CM effigy's are burnt by Dinakaran supporters near Adyar, after the resolutions passed in ADMK General Council meeting.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற