For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்கே நகரில் டிசம்பர் 6ஆம் தேதி முதல் பிரச்சாரம்.. எடப்பாடியார் அறிவிப்பு!

ஆர்கே நகர் தொகுதியில் டிசம்பர் 6ஆம் தேதி முதல் பிரச்சார்த்தை தொடங்கவுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கோவை: ஆர்கே நகர் தொகுதியில் டிசம்பர் 6ஆம் தேதி முதல் பிரச்சார்த்தை தொடங்கவுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார்.

இரட்டை இலையும் அதிமுக கொடியும் கிடைத்த குஷியில் உற்சாகத்தோடு களம் காண்கிறது அதிமுக. அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இன்று ஆர்கே மனுத்தாக்கல் செய்தார்.

டிச.6 முதல் பிரச்சாரம்

டிச.6 முதல் பிரச்சாரம்

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிசம்பர் 6ஆம் தேதி முதல் ஆர்கே நகரில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக அவர் கூறினார்.

விரக்தியின் விளிம்பில் உள்ளார்

விரக்தியின் விளிம்பில் உள்ளார்

தினகரன் தொப்பி சின்னத்தை கேட்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சின்னம் கேட்பது அவர்களின் விருப்பம் என்றார். அரசு மீது ஸ்டாலினால் எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற அவர் குற்றம் கண்டுபிடிக்க முடியாததால் ஸ்டாலின் விரக்தியின் விளிம்பில் உள்ளார் என்றும் கூறினார்.

துரித கதியில் நிவாரண பணிகள்

துரித கதியில் நிவாரண பணிகள்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை அரசு துரிதமாக செய்து வருகிறது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் மழை தொடர்வதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றார்.

கன்னியாகுமரிக்கு பணியாளர்கள்

கன்னியாகுமரிக்கு பணியாளர்கள்

இருக்கின்ற நீரை சேமிக்கும் அளவிற்கு தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன என்றார். கன்னியாகுமரியில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை சீர்செய்ய 2,000 மின் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

English summary
CM Edappadi Palanisami meets press in Coimbatore airport. CM Edappadi palanisami starts campign on 6th of December in RK Nagar by poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X