For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 பேருக்கு அண்ணா பதக்கம், ரூ. 1 லட்சம் பரிசு.. வழங்கினார் ஜெயலலிதா

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று நடந்த 65வது குடியரசு தின விழாவின்போது 6 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தையும், ரூ. 1 லட்சம் பரிசினையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கி கெளரவித்தார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...

முதல்வர் ஜெயலலிதா வீரதீர செயல் புரிந்த பொதுமக்களில் 3 பேருக்கும், அரசு ஊழியர்களில் 3 பேருக்கும் அண்ணா பதக்கங்களை வழங்கினார். ரூ. 1 லட்சத்துக்கான காசோலைகளையும், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் - சான்றிதழ்களையும் வழங்கினார். பதக்கம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:

1. வி.கருப்பையா- திண்டுக்கல் மாவட்டம் (கடந்த 21.10.2013 அன்று காலை 6.30 மணிக்கு கரூர் - திண்டுக்கல் ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டதை கண்டுபிடித்து ரயில் பாதுகாப்பு தலைமை காவலருக்கு தகவல் தெரிவித்துடன் அப்போது மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலை விபத்தில் இருந்து காக்க தனது உடையை கழற்றி சைகை காட்டி நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டு பல உயிர்களை காப்பாற்றினார்)

2. தெத்தீஸ்வரன்- கோவை மாவட்டம் (வாகராயம் பாளையத்தைச் சேர்ந்த இவர் கடந்த 21-5-2013 அன்று துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் ரூ. 24.60 லட்சத்தை கொள்ளையடித்து சென்றபோது அந்த வாகனத்தை மடக்கி பிடித்து கொள்ளையர்களை போலீசார் கைது செய்ய உறு துணையாக இருந்தார்.

3. மறைந்த எஸ்.கோபிநாத் - கன்னியாகுமாரி மாவட்டம் (கோட்டார் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 12-1-2014 அன்று தனது நண்பர்களுடன் சொத்த விளை கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது கடலில் மூழ்கி தத்தளித்த 2 சிறுவர்களை கரையில் தூக்கி வீசி காப்பாற்றினார். ஆனால் கோபிநாத் கடல் அலையில் சிக்கி இறந்து விட்டார். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் கடலில் இறங்கி சிறுவர்களை காப்பாற்றி உயிர் விட்ட அவரது வீரச் செயலை பாராட்டி அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இதை அவரது சார்பில் பிரதிநிதி பெற்றுக் கொண்டார்)

4. எஸ்.பி.ரகமத்துல்லா- கிருஷ்ணகிரி வனச்சரகம் (கடந்த 30-6-2013 அன்று பர்கூர் கண்ணமூர் கிராமத்தில் கிணற்றில் விழுந்த கரடியை மீட்டபோது அது பிடியில் இருந்து தப்பி பொதுமக்களை தாக்கியது. அப்போது ரகமத்துல்லா துணிச்சலுடன் கரடியுடன் போராடி பொதுமக்களை காப்பாற்றினார். இதில் அவருக்கு தலையிலும் முகத்திலும் காயம் ஏற்பட்டது. இவரது வீரதீர செயலுக்காக அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது)

5. குணேந்திரன் - ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையம் (கடந்த 6-10-2013 அன்று காவிரி ஆற்றில் 3 பசுமாடுகள் நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய தகவல் கிடைத்து குணேந்திரனும் மற்ற வீரர்களும் போராடி 2 பசு மாடுகளை மீட்டனர். நடு ஆற்றில் சிக்கிய 3வது பசு மாட்டை காப்பாற்ற முயன்ற குணேந்திரன் ஆற்று சுழலில் சிக்கி உயிரிழந்தார். இவரது துணிச்சலான செயலுக்காக அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இதை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்)

6. பேச்சியம்மாள் - மாவட்ட சமூக நல அலுவலர், பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டத்தில் 243 குழந்தை திருமணங்களை தைரியமாக தடுத்தவர். இதற்காக இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்

ஏ.ஆர்.பஷீர் அகமது- கோவை மாவட்டம் (கோவை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்திற்காக பெரிதும் பாடுபட்டவர். 2006-ம் ஆண்டு கோவையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் நடத்திய சர்வதேச அமைதி தின பிரசாரத்தை சிறப்பாக நடத்த காரணமாக இருந்தவர். 2013-ல் விநயாகர் சதுர்த்தி ஊர்வலமும் அமைதியாக நடைபெற காரணமாக இருந்தவர். இவரை பாராட்டும் வகையில் இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கமும், ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை - சான்றிதழ் வழங்கப்பட்டது.

காந்தியடிகள் காவலர் பதக்கம்

1. சுரேஷ்குமார்-கூடுதல் காவலர் கண்காணிப்பாளர், மது விலக்கு அமலாக்க பிரிவு, ஈரோடு (ஈரோடு மாவட்டத்தில் மது விலக்கு வேட்டையை தீவிரப்படுத்தி 3482 மது விலக்கு குற்ற வழக்குகளை கண்டு பிடித்ததுடன் போலி மதுபான கடத்தலையும், எரி சாராயத்தையும் கைப்பற்றினார். அவரது சிறப்புமிக்க பணியை பாராட்டும் வகையில் 2013-ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் பதக்கமும், ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது).

2. மதி - காவல் துணை கண்காணிப்பாளர், மது விலக்கு மத்திய புலனாய்வு பிரிவு, சென்னை. (திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு புதுச்சேரியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட போலி மதுபானங்களை தடுத்ததுடன் தஞ்சாவூரில் போலி மதுபான தொழிற்சாலையையும் கண்டு பிடித்தவர். இவரது மெச்சத்தக்க பணிக்கான காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது).

3. பெரியசாமி -காவல் ஆய்வாளர், மது விலக்கு பிரிவு, சேலம் மண்டலம் (திருப்பூர், சேலம் மாவட்டத்தில் இயங்கிய போலி மதுபான தொழிற்சாலைகளை கண்டு பிடித்து கள்ளச் சாராயத்தையும் அழித்தவர். இதற்காக காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது)

4. தேவராஜ் - தலைமை காவலர், ஆப்பக் கூடல் போலீஸ் நிலையம், ஈரோடு மாவட்டம் (இவரும் காங்கேயம் உள்பட பல பகுதிகளில் கள்ளச் சாராயத்தை ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டதற்காக காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது).

அதிக அறுவடை - விவசாயிக்கு பதக்கம்

பரமேஸ்வரன் - நசியனூர் கிராமம், ஈரோடு. (திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்ப முறை மூலம் பல ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்தவர். தற்போது பி.பி.டி. 5204 எண்ணு சான்றழிக்கப்பட்ட நெல் விதையை வாங்கி புதிய தொழில் நுட்பங்களை பெற்று ஏக்கருக்கு 6110 கிலோ கிராம் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளார். இது அதிகமான விளைச்சலாகும். இதற்காக ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையும், ரூ. 3500 மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்பட்டது)

CM presents Anna medal to 6 persons
English summary
Details of the recipients who received Awards handed over by the Honble Chief Minister during the Republic Day Celebrations in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X