For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலக்கரி இறக்குமதி ஊழல்: நத்தம் விஸ்வநாதன், ஞானதேசிகன் கைதாக வாய்ப்பு ?

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறி முன்னாள் தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் கைது செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய அதிமுக ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறையினரும் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

Coal import scam: Natham Viswanathan, Gnanadesikan will be arrest?

அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் பணம் பரிமாற்றத்தில் ஊழல் நடத்திருப்பது தொடர்பாக. முன்னாள் தலைமை செயலாளர் ஞான தேசிகனிடமும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இருவரும் கைது செய்யக்கூடும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக ஹாங்காங்குக்கு ரூ.200 கோடி அனுப்பியதாக நத்தம் விஸ்வநாதன் மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர்நாத், மைத்துனர் கண்ணன் உள்ளிட்ட மூன்று பேர் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்திலும் முன்னாள் தலைமை செயலாளர் ஞான தேசிகனும் விசாரணையில் சிக்கியுள்ளதால் அவரும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Coal import scam: former minister Natham Viswanathan, tamilnadu former Chief Secretary Gnanadesikan will be arrest?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X