சாதியை சொல்லி திட்டிய பேராசிரியர்.. ஆசிட் குடித்த மாணவி.. கதறும் தாயார்!
கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றதால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Recommended Video
கும்பகோணம்: "சாதியை சொல்லி என் பொண்ணை திட்டிட்டார் பேராசிரியர் ரவிச்சந்திரன்.. அதனால்தான் அவள் ஆசிட்டை குடிச்சிட்டு இப்போ உயிருக்கு போராடுகிறாள்.. ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுத்தே ஆகணும்" என்று கல்லூரி மாணவி கவுசல்யாவின் தாய் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கும்பகோணம் ஆலமன் குறிச்சி கிராமத்தை சேர்ந்த மாணவி கவுசல்யா. இவர், அரசினர் கல்லூரியில் எம்.ஃபில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.

எம்ஃபில் மாணவர்கள் பொதுவாக ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிப்பது வழக்கமான ஒன்று. அப்படித்தான் கவுசல்யா என்பவர் பேராசிரியர் ரவிச்சந்திரனிடம் சமர்ப்பித்துள்ளார்.
ஆனால் அதனை ரவிச்சந்திரன் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. மேலும் ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி அதனை தட்டிக்கழித்தாகவும் மாணவி தரப்பில் கூறப்படுகிறது. இதைதவிர, பேராசிரியர் சாதி ரீதியாக ரவிச்சந்திரன் திட்டிவிட்டார் என்று கூறி மனம் உடைந்த மாணவி, இன்று கல்லூரி ஆய்வகத்தில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார்.
அந்த ஆசிட் மிகவும் ஆபத்தானது என்பதால், குடித்தவுடன் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். லேப்-பில் நிலைக்குலைந்து விழுந்து கிடந்த மாணவியை அங்கிருந்தவர்கள் கண்டு, பதறிபோய், கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் மாணவி உள்ளார்.
"மகளை சாதி ரீதியாக துன்புறுத்தி மன உளைச்சலை ஏற்படுத்திய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் தாய் ஜோதி கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications