For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டம் கட்டப்படும் எச் ராஜா.. கனிமொழி குறித்து அவதூறு பரப்பியதற்காக வழக்குப்பதிவு!

கருணாநிதி, கனிமொழி குறித்து டிவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட புகாரில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கனிமொழி குறித்து அவதூறு பரப்பியதற்காக வழக்குப்பதிவு!- வீடியோ

    சென்னை: திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கனிமொழி குறித்து டிவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட புகாரில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் பூதாகரமானது. இதுதொடர்பாக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

    அப்போது தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதாக பெண் செய்தியாளர் குறித்து இழிவான கருத்துக்களை கூறியிருந்தார்.

    இழிவான கருத்துக்கள்

    இழிவான கருத்துக்கள்

    அதேபோல் பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் குறித்து மிகவும் இழிவான கருத்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    கள்ளக்குழந்தை

    அதாவது தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.' என பதிவிட்டிருந்தார்.

    கொடும்பாவி எரிப்பு

    கொடும்பாவி எரிப்பு

    எச் ராஜாவின் இந்த பதிவை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். திமுக மகளிர் அணியினர் எச் ராஜாவின் கொடும்பாவியை எரித்தனர்.

    எச் ராஜா மீது வழக்கு

    எச் ராஜா மீது வழக்கு

    இந்நிலையில் இந்த விவகாரம் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கனியூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வேலுசாமி ஏப்ரலில் தந்த புகாரில் கருத்தம்பட்டி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    English summary
    Complaint registered against H Raja for posting derogatory comments in social media about DMK MP Kanimozhi and Former DMK leader Karunanidhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X