For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸுக்கும் ஆர்ப்பாட்ட ஆசை வரும்ல.. சென்னையில் இளங்கோவன்... திருச்சியில் குஷ்பு தலைமையில்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுங்கட்சிக்கு எதிரா அடிக்கடி ஆர்பாட்டம் செய்யணுமப்பு... அப்பத்தான் நாமளும் அரசியல் களத்துல இருக்கோம்னு மக்களுக்கு தெரியும் என்பதை உணர்ந்த காங்கிரஸ் கட்சியினரும் களமிறங்கியுள்ளனர்.

அவர்களுக்கு வகையாக சிக்கியது நிலம் கையகப்படுத்தும் மசோதா. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வரும் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

திருச்சியில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் நடிகை குஷ்பு பங்கேற்க உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், சென்னையிலும், சிவகங்கையில் ப.சிதம்பரமும் ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளனர்.

Congress to hold protest against Land Bill on March 23

இது குறித்து அக்கட்சியினர் வெளியிட்ட அறிக்கை :

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத்திய பா.ஜ.க. அரசு மக்களவையில் நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை (விவசாயிகளின் உரிமைகளை பறிக்கிற கருப்புச் சட்டத்தை)எதிர்த்துத் தமிழகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 23, 2015 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப் பட்டுள்ளது.

விவசாயிகளின் உரிமைகளை பறிக்கிற கருப்புச் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இச்சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்து விவசாய விரோதப் போக்கை வெளிப்படுத்தி உள்ளது. மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கினை கண்டிக்கிற வகையில் இப்போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாவட்டந்தோறும் நடத்துகிறது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வாரியாக கலந்து கொள்கிற தலைவர்களின் பட்டியல்:

1. சென்னை - திரு.இளங்கோவன்

2. சிவகங்கை - திரு. ப.சிதம்பரம்

3. சேலம் - திரு. கே.வீ. தங்கபாலு, திரு.ஜி.சுந்தரவடிவேலு

4. கோயமுத்தூர் - திரு. ஆர். பிரபு, திரு. டி. செல்வம்

5. தஞ்சாவூர் திரு. மணிசங்கர அய்யர், MP, திரு.சி.சாமிநாதன்

6. திண்டுக்கல் - திரு. இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் MP, திரு. வி.எம். தங்கவேல்

7. திருநெல்வேலி - திரு. ஆர். தனுஷ்கோடி ஆதித்தன்

8. விருதுநகர் - திரு. குமரி அனந்தன், திரு.மாணிக்கம் தாகூர்

9. இராமநாதபுரம் - திரு. சு. திருநாவுக்கரசர், திரு.அரிமளம் சுந்தர்ராஜன்

10. திருவள்ளூர் - டாக்டர். கே. ஜெயக்குமார், திரு.ஆ.கோபண்ணா, திரு. எம். ஜோதி

11. நாகப்பட்டிணம் - டாக்டர் ஏ. செல்லகுமார், திரு.பொன். கிருஷ்ணமூர்த்தி, திரு. எஸ். ராஜ்குமார்

12. கிருஷ்ணகிரி - திரு. கே. கோபிநாத், எம்.எல்.ஏ, திரு.டி.எல். சதாசிவலிங்கம்

13. விழுப்புரம் - திருமதி. டி. யசோதா, திரு.டி.என்.முருகானந்தம்

14. தேனி - திரு.ஜே.எம். ஆரூண், திரு.கே.எஸ்.கோவிந்தராஜன்

15. திருச்சி - திருமதி. குஷ்பு சுந்தர், திருமதி. ராணி வெங்கடேசன்

16. வேலூர் - டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன், டாக்டர் கே. விஜயன்

17. கடலூர் - திரு. கே.எஸ். அழகிரி, டாக்டர்.கே.ஐ.மணிரத்னம்

18. கன்னியாகுமரி - திரு. ஜே.ஜி. பிரின்ஸ் எம்.எல்.ஏ, டாக்டர் விஜயதரணி, எம்.எல்.ஏ

19. காஞ்சீபுரம் - திரு. கு. செல்வப்பெருந்தகை, திரு.கீழானூர் ராஜேந்திரன்

திரு. மு. சக்கரபாணி ரெட்டியார், திரு.து.பிராங்க்ளின் பிரகாஷ், திரு. ஆர். சுந்தரமூர்த்தி

20. மதுரை - திரு. எச். வசந்தகுமார், திரு. என்.சுந்தரம்

21. தூத்துக்குடி - திரு.ஏ.பி.சி.வி.சண்முகம், திரு.எஸ்.ஜஸ்டின்

22. தருமபுரி - திரு.ஜி.ஏ. வடிவேலு, திரு.ஆர்.தாமோதரன், திரு. ஜி.கே. தாஸ்

23. அரியலூர் மற்றும் பெரம்பலூர் - திரு. உ.பலராமன், டாக்டர் சுப. சோமு

24. திருவண்ணாமலை - திரு. சி.டி.மெய்யப்பன், டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத்

25. கரூர் - திரு. கே. தணிகாசலம், திரு. பி.என். நல்லுசாமி

26. திருப்பூர் - திரு.என். நஞ்சப்பன், திரு.கே.சிரஞ்ஜீவி

27. நாமக்கல் - திரு. கே. பாலசுப்பிரமணியன், திரு.மயூரா ஜெயக்குமார்

28. ஈரோடு - திரு. பி. வேல்துரை, திரு. வீனஸ் மணி

29. நீலகிரி - திரு. என்ஜீனியர் ராதாகிருஷ்ணன், திரு. தாராஷபி

30. திருவாரூர் - திரு. அமெரிக்கை நாராயணன், திரு.ஏ.சந்திரசேகர்

31. புதுக்கோட்டை - திரு.எஸ்.எம். இதாயத்துல்லா, திருமதி. சுஜாதா

English summary
Congress said it will hold statewide protest demonstrations on March 23 opposing the Land Bill and to urge the Centre to take it back as it "usurped the rights" of farmers. "The protest demonstration will be held in 31 districts including Chennai, Madurai, Coimbatore, Tiruchi, Salem and Sivaganga," TNCC chief Elangovan said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X