தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுகிறார் ஜி.கே.வாசன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நியமிக்கப்படக் கூடும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் ஞானதேசிகனின் 2 ஆண்டுகால பதவிக்காலம் கடந்த 16-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

ஜி.கே.வாசனின் ஆதரவாளரான ஞானதேசிகனின் பொறுப்பு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் பெரிதாக இல்லைதான். இருப்பினும் திமுகவுக்கு எதிரான போக்கை அவர் கடைபிடித்ததால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியில் இருக்கிறது.

இந்நிலையில் அவ்வப்போது காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுப்பி வரும் ஜி.கே.வாசனையே தமிழக தலைவராக்கிவிட்டால் என்ன என்று மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

திமுக- அதிமுகவுக்கு நெருக்கமானவர்

திமுக- அதிமுகவுக்கு நெருக்கமானவர்

ஜி.கே.வாசன் திமுக தலைவர் கருணாநிதியுடன் இணக்கமான போக்கைக் கொண்டவர். அதேபோல் அதிமுகவின் ராஜகுருவான சோவுடன் மிக நெருக்கமானவர் வாசன் . இதனால் லோக்சபா தேர்தலில் எந்த அணிக்கும் தாவமுடியும் என்று கருதுகிறது காங்கிரஸ்.

தனிக்கட்சி அபாயம்

தனிக்கட்சி அபாயம்

காங்கிரஸ் மேலிடத்துடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிப்பதுடன் ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் மேலிட நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தும் வருகிறார் வாசன். இதனால் அவர் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்ற தனிக் கட்சியை தொடங்கிவிடுவாரோ என்ற அச்சம் காங்கிரஸ் மேலிடத்துக்கு இருந்து வருகிறது

லோக்சபா தேர்தலில்..

லோக்சபா தேர்தலில்..

அப்படி ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கி திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் பரிதாப தோல்வியைத் தழுவும் என்பதை உணர்ந்தே அவரையே தலைவராக்கிவிட்டால் அமைதிகாப்பார் என்று கருதுகிறது காங். மேலிடம்..

ஜி.கே.வாசனுக்கும் வேறவழியில்லை..

ஜி.கே.வாசனுக்கும் வேறவழியில்லை..

அதேபோல் ஜி.கே.வாசனின் ராஜ்யசபா பதவிக் காலம் 2014-ல் முடிவடைகிறது. ஆனால் தற்போதைய சூழலில் அவர் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக முடியாத அளவுக்கு கூட்டணி நிலவரம் இருக்கிறது.

லோக்சபா தேர்தலில் போட்டி?

லோக்சபா தேர்தலில் போட்டி?

அதே நேரத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் வாசன் விரும்பவில்லையாம்.

தனிக்கட்சி போணியாகுமா?

தனிக்கட்சி போணியாகுமா?

மேலும் தனிக்கட்சி தொடங்கினால் அது தேறுமா என்ற சந்தேகமும் வாசனுக்கு இருந்து வருகிறதாம்.

தலைவராகவே இருந்துவிடலாம்..

தலைவராகவே இருந்துவிடலாம்..

இப்படி வேறவழியில்லாத நிலையில் காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்துவருவதைப் போல பேசாமல் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுவிட்டால் கொஞ்சம் கவுரவமாகவே இருந்துவிடலாம் என்பதுதான் ஜி.கே.வாசனின் எண்ணமாம்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இப்படி ஜி.கே.வாசனும் இறங்கி வந்திருப்பதால் விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவராக அவர் நியமிக்கப்படும் அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+