For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 ரத்த மாதிரியிலும் வைரஸ் இல்லை.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடையாது.. சுகாதாரத்துறை குட் நியூஸ்!

கொரோனா வைரஸ் இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை. அதனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனாவை முதலில் கண்டுபிடித்த டாக்டர்... வெளியான திக் பின்னணி

    சென்னை: கொரோனா வைரஸ் இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை. அதனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வருகிறது. மொத்தம் 22 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் மூன்று பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இன்னும் பரவவில்லை. திருவண்ணாமலை உள்ளிட்ட இரண்டு இடங்களில் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக அஞ்சப்பட்டது.

    கப்பலில் உள்ள 10 பேருக்கு கொரோனா.. நடுக்கடலில் தவிக்கும் 3500 பேர்.. எங்கு செல்வது? ஜப்பானில் பகீர் கப்பலில் உள்ள 10 பேருக்கு கொரோனா.. நடுக்கடலில் தவிக்கும் 3500 பேர்.. எங்கு செல்வது? ஜப்பானில் பகீர்

    என்ன அச்சம்

    என்ன அச்சம்

    தமிழகத்தில் வைரஸ் தாக்குதல் இருப்பதாக அஞ்சப்பட்ட எல்லோரும் சமீபத்தில் சீனா சென்று விட்டு திரும்பியவர்கள். இவர்களுக்கு தீவிரமாக சோதனை நடந்து வருகிறது. ஆனால் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், இவர்களுக்கு நோய் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் இவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    எங்கே

    எங்கே

    புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் இந்த ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஒருவர் இந்த வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார். இவர், சமீபத்தில் சீனா சென்று திரும்பியவர். இவர் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். அதேபோல் புதுக்கோட்டையில் ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதாக அஞ்சப்பட்டது.

    சோதனை செய்தனர்

    சோதனை செய்தனர்

    சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒருவருக்கும் வைரஸ் தாக்குதல் இருப்பதாக அஞ்சப்பட்டது.இது போல மொத்தம் 9 பேருக்கு இந்த நோய் தாக்குதல் இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. இவர்களில் 5 பேரின் ரத்த மாதிரி புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 5 பேருக்கும் வைரஸ் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்னும் 4 பேருக்கு சோதனை செய்யப்பட்டது.

    கடைசியில் முடிவு

    கடைசியில் முடிவு

    இவர்கள் 4 பேருக்கும் நோய் தாக்குதல் இல்லை. தமிழகத்தில் இந்த நோய் தாக்குதல் அச்சத்துடன் அனுமதி ஆன யாருக்கும் நோய் தாக்குதல் இல்லை. இந்த வைரஸ் இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை. அதனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பான கண்காணிப்பு நடந்து வருகிறது.

    English summary
    Coronavirus: All blood samples are negative, No attack in Tamilnadu so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X