நாங்க இருக்கோம் கமல்... ஆதரவுக்கரம் நீட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருப்பதாக விமர்சித்த நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவதாகவும், அவருக்கு தாங்கள் ஆதரவளிப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி கூறியுள்ளது.

அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல் கரைபுரண்டோடி இருப்பதாகச் சொன்ன நடிகர் கமல்ஹாசனைக் கண்டித்து அதிமுக அமைச்சர்கள் கடும் தாக்கதல் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அமைச்சர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கமலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

CPM pats Kamalhassan and hold support hands

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடிகர் கமல்ஹாசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் ஊழலை சுட்டிக்காட்டிய கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டக் கூடாது என்றும் ஜி.ஆர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kamal Hassan has more responsibility says Karunas MLA-Oneindia Tamil

அரசை விமர்சிப்பது அரசியல் சட்ட உரிமை என்றும் அதிமுக பொதச்செயலாளர் சசிகலா குற்ற வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருப்பதை அமைச்சர்கள் மறக்கக் கூடாது. கமல்ஹாசன் வரி கட்டி இருக்கிறாரா என்பதை விசாரிப்போம் என்று அமைச்சர்கள் பேசுவது மிரட்டல். இதன் மூலம் வரி கட்டாதவர்கள் அரசைப் புகழ்ந்தால் கண்டுகொள்ளாது என்பது அமைச்சர் பேச்சில் அப்பட்டமாக புரிகிறது. சரியான கருத்துக்கு மிரட்டப்படும் கமலுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம், என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CPM general secretary G.Ramakrishnan released statement in favour of actor Kamalhassan and also appreciates Kamal's charges are meaningful
Please Wait while comments are loading...