For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடதுசாரிகள் 18 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: இது ஜி. ராமகிருஷ்ணன் 'நம்பிக்கை"

By Mathi
|

திண்டுக்கல்: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இடதுசாரிகள் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

திண்டுக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளர் என்.பாண்டியை அறிமுகப்படுத்தி செயதியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் விரோத கொள்கையை கடைபிடித்து வந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மீதும், அதற்கு துணை நின்ற திமுக மீதும் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றி வரும் காங்கிரசையும், வகுப்பு வாத பாஜகவையும் தவிர்த்து ஒரு மாற்று அரசு அமைக்க இடதுசாரிகள் தரப்பில் முயற்சித்து வருகிறோம்.

CPM state secretary express confidence left will win 18 seats in TN

தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் போட்டியிடாத 22 தொகுதிகளில் பாஜக அணி, திமுக அணி, அதிமுக, காங்கிரஸ் என யாரையும் ஆதரிக்க கூடாது என முடிவு செய்துள்ளோம். வகுப்புவாதம், தவறான பொருளாதார கொள்கை குறித்து மக்களிடம் எடுத்துச் செல்வோம். மேலும் மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம்.

கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும். தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும்.

உள்ளது. காங்கிரசுக்கு மாற்று பாஜக அல்ல. காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாநில கட்சிகளும் மாற்று கிடையாது. அவர்களுக்கு மாற்றாக விளங்கும் இடதுசாரிகளுக்கு, மக்களிடம் ஆதரவு கிடைக்கும்.

முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் மதவாதம் மற்றும் ஜாதிய அமைப்புகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மத்தியில் ஊழலற்ற, நேர்மையான அரசு அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

English summary
CPM state secretary G Ramakrishnan said that DMK and AIADMK are similar parties and can't be expected to usher in any change in the state. Only the Left can transform governance, Ramakrishnan said while introducing the Dindigul CPM candidate at a poll meeting on Monday. Also he expressed confidence that CPM would win all the 18 Lok Sabha seats CPM and CPI are jointly contesting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X