சாமியார் உறுப்பை வெட்டிய பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்.. போலீசார் தீவிர விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாமியாரை தாக்கியது பெண்ணின் நண்பர்கள் என்பது தெரிய வந்ததால் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்தவர் சாமியார் ஹரி. இவர் திருவனந்தபுரம் பேட்டையில் ஒரு பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் அந்த வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த பெண்ணின் சட்டம் படிக்கும் 23 வயது பெண் சாமியாரின் பிறப்பு உறுப்பை அறுத்ததாக கூறப்பட்டது.

Cuts off godman’s penis case, Police inquiry

இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக இளம்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் சாமியார் தன்னை 16 வயது முதல் பலாத்காரம் செய்து வந்ததாகவும், தொல்லை அதிகரித்ததால் உறுப்பை அறுத்ததாகவும் கூறினார். இதனால் சாமியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, சாமியாரின் மர்ம உறுப்பை தனது மகள் அறுக்கவில்லை என்றும், அவளது காதலர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்றும் மகளின் தாயார் டிஜிபியிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில், இளம்பெண் ஒருவர் எழுதிய கடிதம் திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சம்பந்தப்பட்ட சாமியார் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம். என்னை அவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை. என் காதலருடன் சாமியாருக்கு முன் விரோதம் இருந்தது. சம்பவதன்று சாமியாரின் மர்ம உறுப்பை அறுக்க கூறினர். ஆனால் எனக்கு தைரியம் இல்லாததால் அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து இந்த செயலை செய்து விட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Law student cut off godman’s penis case, which was suddenly changed its route in Kerala, Police inquiry.
Please Wait while comments are loading...