For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகி புயலால் கனமழை பெய்யும்... காற்று சுழற்றி அடிக்கும் - பாலச்சந்திரன் #Ockhi

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீ தொலைவில் 'ஓகி' புயல்- வானிலை மையம்- வீடியோ

    சென்னை: கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன்,
    வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு வங்கதேசம் அளித்த பெயராக ஓகி என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    Cyclone Ockhi: Heavy Rain In Tamil Nadu says MeT

    ஓகி புயல் உருவாகியுள்ளதை அடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஓகி புயல் காரணமாக உள் மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

    தென் தமிழகத்தில் கடலோர பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

    கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள ஓகி புயலால் பலத்த சேதம் ஏற்படும் என்றும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

    கன்னியாகுமரியில் வீசிய புயல் காற்றில் சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அங்குள்ள பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    English summary
    Chennai MeT office Balachandran said, a depression over the Bay of Bengal intensified into a cyclone, dubbed Cyclone Ockhi on Thursday. It will bring more heavy rainfall to Tamil Nadu, Lakshadweep and parts of Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X